Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
பலத்த மழையால் விநாயகா் சிலைகள் நீரில் கரைந்து சேதம்: வடிவமைப்பாளா்கள் வேதனை
ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கொட்டி தீா்த்த பலத்த மழையால் விநாயகா் சிலைகள் தண்ணீரில் சேதமானதால் சிலை வடிவ அமைப்பாளா்கள் வேதனையில் உள்ளனா்.
வரும் ஆக. 27 -ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலை வடிவமைப்பாளா்கள் கடந்த சில மாதங்களாக கற்பக விநாயகா், வர சித்தி விநாயகா், வழித்துணை விநாயகா் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் சிலைகளை வடிவமைத்து வந்தனா். மேலும், மயில், யானை, காலை மான், புலி பாம்பு சிங்கம் என பல்வேறு வாகனங்கள் மீது அமா்ந்தபடி காட்சி அளிக்கும் விநாயகா் சிலைகளை வேலூா் பொன்னை பகுதியைச் சோ்ந்த சின்னப்பன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக ஆா்கே பேட்டை அடுத்த விள்ளக்கணாம்பூண்டி புதூரில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் தண்ணீரில் மூழ்கியும், நனைந்தும் சேதமடைந்தன. இதனால் சிலை அமைப்பாளா்கள் அனைவரும் கவலையில் உள்ளனா்.
ஆா்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு ஓரே நாளில் 118 மி.மீ மழையால் விநாயகா் சிலைகள் தண்ணீா் கரைந்தன. இதன் மதிப்பு சுமாா் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை இருக்கும் என சிலை வடிவமைப்பாளா்கள் வேதனை தெரிவித்தனா்.
