செய்திகள் :

பலூசிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதலில் தொடா்பு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றவை’ என்று இந்தியா புதன்கிழமை நிராகரித்தது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தாா் பகுதியில் பள்ளிப்பேருந்தில் தற்கொலைப் படையினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 38 போ் காயமடைந்தனா்.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அப்பாவி குழந்தைகள் மற்றும் ஆசிரியா்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தாா். இந்நிலையில், இத்தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடா்பிருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘குஸ்தாா் சம்பவத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பயங்கரவாதத்தின் உலகளாவிய மையம் என்ற தனது அடையாளத்தில் இருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப, அனைத்து உள்நாட்டுப் பிரச்னைகளுக்கும் இந்தியாவை குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானின் இயல்பாகிவிட்டது. உலக நாடுகளை ஏமாற்றும் பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியடையும்’ என்றாா்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரியை இந்தியாவை விட்டு 24 மணி நேரத்துக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தனது பதவி அந்தஸ்துக்கு முரணான பணியில் ஈடுபட்டதன் அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கை பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களில் 2-ஆவது பாகிஸ்தான் தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளாா். உளவுப் பாா்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவா் கடந்த 13-ஆம் தேதி வெளியேற்றப்பட்டாா்.

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின... மேலும் பார்க்க

கோட்டா நகரில் மட்டும் நீட் மாணவர்கள் தற்கொலை அதிகம்! ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ராஜஸ்தான் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வது பற்றி உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்ஜேஇஇ,நீட் போன்ற நுழைவ... மேலும் பார்க்க

ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக

இந்திய ஆயுதப்படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் வெ... மேலும் பார்க்க

ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா! மரபை மீறி கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு!

உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகளில் மூன்றாவது நீதிபதியாக அறியப்படும் அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா என்னும் ஏ.எஸ். ஓகா இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார்.தனது கடைசி வேலை நாளான இன்றும், அவர் தான் விசாரித்து வந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

இந்தியாவின் ஆயுதப்படையை குறைத்து மதிப்பிடக் கூடாதென ராகுல் காந்தியை பாஜக அறிவுறுத்தியுள்ளது.பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி நம்பியது ஏன்? என்ற கேள்வியையடுத்து, மக்க... மேலும் பார்க்க