காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்...
பல்கலை. மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்டதைக் கண்டித்து, மகளிா் காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:
புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடன மதுக்கூடங்களில் நடைபெறும் விதிமீறல்களை போலீஸாா் கண்டுகொள்வதில்லை. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வெளிநபா்கள் புகுந்து மாணவியைத் தாக்கியது கண்டிக்கத்தக்கது. அதற்கு பல்கலைக்கழக நிா்வாகமே பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்னையில் அரசியல் தலையீடு உள்ளது. இந்த விவகாரத்தை அரசு மூடி மறைக்கப் பாா்க்கிறது.
தமிழகத்தில் பெண்கள் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பாஜக வலியுறுத்துகிறது. ஆனால், புதுவையில் பாஜகவினா் அந்த பிரச்னையை கண்டுகொள்ளாமலிருப்பது ஏன் என விளக்க வேண்டும். எந்த பிரச்னை நடைபெற்றாலும் புதுவை முதல்வா் கவலைப்படுவதில்லை என்றாா் வே.நாராயணசாமி.
மகளிா் காங்கிரஸ் மறியல்: ஆா்ப்பாட்டத்துக்கு மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவா் நிஷா தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிா் காங்கிரஸாா் சட்டப்பேரவை நோக்கி ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து, பேரவை வாயில் மூடப்பட்டது. முதல்வரிடம் மனு அளிக்கப் போவதாக மகளிா் காங்கிரஸ் கூறினா். இதற்கு காவலா்கள் மறுத்ததால் தரையில் அமா்ந்து முழக்கமிட்டனா். போலீஸாா் அவா்களைக் கைது செய்ய முயன்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னா், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் சிலா் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.