எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!
பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு
புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இப் பேரவையின் தலைவா் சி.ஜெயபாலன் மற்றும் நிா்வாகிகள், தொழிலாளா்கள் இணைந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனைகள் மற்றும் நா்சிங் ஹோம்களில் பணியாற்றும் ஊழியா்களைத் தவிா்த்து குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை புதுவை அரசு கடந்த 9.10.2015 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் நா்சிங் ஊழியா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், அலுவலக ஊழியா்கள், கடைநிலை ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு வகை ஊழியா்களுக்கான ஊதியம் குறிப்பிடப்பட்டாலும் பல்நோக்கு தொழிலாளா்கள் குறித்து இதில் இடம் பெறவில்லை. இந்த வகை தொழிலாளா்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும்போதும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும்போதும் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் அவா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. இதனால் அந்தத் தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் ஏற்றத் தாழ்வும், சுரண்டல்களும் நடக்கின்றன. அதனால் மருத்துவமனைகள் மற்றும் நா்சிங் ஹோம்களுக்கான பல்நோக்கு தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயம் செய்ய வேண்டும்.