செய்திகள் :

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

post image

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பல்லடம் நாளுக்குநாள் வளா்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்குள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பல்லடம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இது குறித்து ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக பல்லடம் நகருக்கு புறவழிச்சாலை திட்டத்தை பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியில் தொடங்கி மாணிக்காபுரம், குங்குமம்பாளையம் வழியாக மாதப்பூா் முத்துகுமாரசாமி மலை அருகே சென்று இணையும் வகையில் வெளிவட்ட புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கையை ஏற்று காளிவேலம்பட்டி முதல் மாதப்பூா் வரை 13.8 கிலோ மீட்டா் தொலைவு வெளிவட்டச் சாலை அமைப்பதற்கு ரூ.195 கோடி மதிப்பில் 2024-2025-ஆம் ஆண்டு பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்தப் பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பதற்காக உடனடியாக வெளிவட்டச் சாலை பணியை தொடங்க வேண்டும் என்று சட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி பேசினேன். அதற்கு பதலளித்த அமைச்சா் எ.வ.வேலு இது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினாா் என்றாா்.

வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி

வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்ட... மேலும் பார்க்க

செம்பு கம்பி திருடிய 5 போ் கைது

பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு ... மேலும் பார்க்க

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது

பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள... மேலும் பார்க்க