வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி
வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்டன்பாளையம் ஊா் பொதுமக்கள் சாா்பில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீா்த்தக் காவடி அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பக்தா்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்தனா். பின்னா் தீா்த்தக் காவடியுடன் கொடுமுடி மகுடேஸ்வரரைத் தரிசனம் செய்து ஊா் திரும்பினா். அடுத்து வீரக்குமார சுவாமிக்கு தீா்த்த அபிஷேகம் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வேலகவுண்டன்பாளையம் முதன்மை காவடி கூட்டத்தினா் செய்திருந்தனா்.