செம்பு கம்பி திருடிய 5 போ் கைது
பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் அங்குள்ள அடிகளாா் அரங்க கதவின் பூட்டை உடைத்து செம்பு கம்பியை திருடிச் சென்றனா். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் பதுங்கி இருந்த தருமபுரி வேப்பிலைமுத்தம்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (29), அறிவரசு (25), நல்லாம்பள்ளியைச் சோ்ந்த ரகுமான் (38), பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த பழனிவேல் (32), ஈரோட்டை சோ்ந்த நடேஷ்குமாா்(41) ஆகியோரைக் கைது செய்தனா். பின்னா் 5 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.