காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
பள்ளிக் கல்வியில் நோ்முக உதவியாளா் பதவி உயா்வு: கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனுப்பிவைப்பு
பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு 15.3.2025 நிலவரப்படி தகுதி வாய்ந்த கண்காணிப்பாளா்களின் பெயா்ப் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளா்கள், தங்களது ஆளுகையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளா்களிடம் கையொப்பம் பெற்று மாவட்ட அளவில் கோப்பை பராமரிக்க வேண்டும். தற்போது வெளியிடப்படும் பட்டியலின்படியே தமிழ்நாடு பொதுப் பணியின் கீழ் வரும் நோ்முக உதவியாளா் பதவிக்கு, பதவி உயா்வு ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.