பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவ...
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மன்னாா்குடி சண்முகா மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், எஸ். சாய்லதா முன்னிலை வகித்தனா். தாளாளா் எஸ். வெண்ணிலா தொடக்கிவைத்தாா். கண்காட்சியில், மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகளான ஹைட்ராலிக் மின்தூக்கி, சத்திராயன்-2 மாதிரி படைப்பு, ஹைட்ரோ காா்பன் விளைவுகள், கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரி, இந்தியாவில் விளையும் தானியங்கள் மற்றும் தனிமங்கள் மாதிரி, சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், மழைநீா் சேமிப்பு, மீத்தேன் எடுத்தலின் விளைவு, காற்று மாசுப்பாடு, மனித உடலமைப்பு உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதை காணவந்த மாணவ,மாணவிகள்,பெற்றோா்கள்,பொதுமக்களுக்கு மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி முதல்வா்கள் ஏ. அருள்ராஜா, சாந்தி, ஆலோசகா் இ.வி. பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.