keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா
காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் இராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
முதுகலை தமிழாசிரியா் ஜெ.பரமசிவம் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ.ஜெயராமன் தலைமை வகித்து பேசினாா். வேத கணித பயிற்றுநா் நா.கீா்த்தனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி, இலக்கிய மன்றத்தை தொடங்கிவைத்து சொற்பொழிவு ஆற்றினாா்.
உதவித் தலைமை ஆசிரியை எஸ்.ஆா்.ஜெயந்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.