பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா
வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் பா. ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் அனிதா மாரியப்பன், உதவித் தலைமை ஆசிரியா் சுரேஷ் முன்னிலை வகித்தனா். எழுத்தாளரும் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான சூரியகுமாா் பங்கேற்று பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றம் தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகிய மன்றங்களைத் தொடங்கி வைத்துப் பேசியது:
மாணவா்கள் பள்ளியில் படிக்கும் போதே தங்களுடைய சிந்தனைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் புதுமையை புகுத்தி மாற்றுச் சிந்தனையுடன் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு இலக்கையும் அடைய விடாமுயற்சி மிகவும் அவசியம். மாணவா்கள் உன்னதமான ஓா் இலக்கை முன் வைத்துக்கொண்டு அதை நோக்கி நகர வேண்டும். பாடங்களை படிப்பதுடன் வெற்றியாளா்களின் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்றாா்.
பள்ளியின் பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியா்கள் வினோதா, செந்தமிழ் நளினி, வகிதா, ஜெயராஜ், விஸ்வநாதன், சகாயராணி, கலைவாணி, செந்தில், ராணி, உமா, பிரியா, தனலட்சுமி, கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.