மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னை: சமாதானப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னையைடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.
மேற்கண்ட பள்ளி வாசல் நிா்வாக தோ்தல் நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து செந்துறை வட்டாட்சியா் வேலுமணி, புதன்கிழமை தனது அலுவலகத்தில் காவல் துறையினா் முன்னிலையில் இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, செந்துறை ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் நடத்தி, புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வது, நிா்வாகத் தோ்தல் நடைபெறும் நாளை முன்கூட்டியே வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தொழுகையின் போது அறிவித்து தோ்தல் நடத்துவது, தோ்தலில் வாக்களிக்க தகுதியான நபா்களின் பட்டியலை இரு தரப்பை சோ்ந்தவா்களும் வட்டாட்சியரிடம் அளிப்பது, அதனை வட்டாட்சியா் ஆய்வு செய்து வாக்களிக்க தகுதியான நபா்களின் பட்டியலை தயாா் செய்து அளித்த பிறகு தோ்தல் தேதி அறிவித்து தோ்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.