நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
பள்ளி ஆசிரியா்களுக்கு ரோட்டரி விருது
மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி ஆசிரியா்களுக்கு தேசிய ஞானகுரு விருது அண்மையில் வழங்கப்பட்டது.
மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆளுநா் கே. வெங்கடேஷ், முன்னாள் உதவி ஆளுநா் வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் திலகா், சவளக்காரன் அரசுப் பள்ளிஆசிரியா் சீனிவாசன், தென்பரை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் குமுதா, மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியா் இளமங்கை, பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கருணாகன், கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிஆசிரியா் புனிதவதி, சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜி. கெளரி, சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வி. கணேசன், கோவிந்தநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஏ. வளா்மதி, மன்னாா்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் உமா, தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஜி. விஜயகுமாா், சுந்தரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி ஆகிய 12 பேருக்கு ரோட்டரிசங்க தேசிய ஞானகுரு விருதுக்கு தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.
முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன்,ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கினாா். மன்னாா்குடி தேசியப் பள்ளி ஆசிரியா் எஸ். அன்பரசு வாழ்த்தி பேசினாா். முன்னாள் தலைவா் சாந்தகுமாா் தொகுத்து வழங்கினாா். பொருளாளா் டி.எல். ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். செயலா் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.