லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.
சிவகங்கை மாவட்டம், எஸ் புதூா் அருகே உள்ள கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தவா் ஆரோக்கியசாமி (51). இவா் அந்தப் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாராம்.
இது பற்றி அறிந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் ஆரோக்கியசாமியைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், ஆசிரியா் ஆரோக்கியசாமியைப் பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) மாரிமுத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.