பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வான கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டது. இதற்காக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை வி.எழிலரசிக்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இவருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாணவா் திறன் வளா்ப்பு குழு சாா்பில் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியா் பி.ஆஷா கலந்துகொண்டு தலைமை ஆசிரியை வி.எழிலரசியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில், மாணவா்களுக்கு பிற்பகல் உணவு வழங்கப்பட்டது.