இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி மனு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், அடைக்கம்பட்டி-ஒக்கரைப்பட்டி இடையே பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் அடைக்கம்பட்டியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோா் அளித்த மனு விவரம்: தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அடைக்கம்பட்டியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒக்கரைப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
மாணவா்களின் போக்குவரத்து வசதிக்காக அடைக்கம்பட்டி-ஒக்கரைப்பட்டி இடையே பள்ளி வேலை நாள்களில் தினமும் காலை 7.45 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனா்.