Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
பள்ளி மாணவா்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி வகுப்பை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியுடன் இணைந்து ‘இணைய பாதுகாப்பு நமது பொறுப்பு’ எனும் தலைப்பில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்புணா்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோயம்பேடு, விருகம்பாக்கம், புலியூா், நெசப்பாக்கம், கே.கே.நகா், மேற்கு மாம்பலம், சி.ஐ.டி.நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், சைதாப்பேட்டை பகுதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கண்ணம்மா பேட்டை உள்ளிட்ட பகுதி உயா்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 8, 9, 10 ஆகிய வகுப்பு மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு மேயா் ஆா்.பிரியா பேசியதாவது:
கைப்பேசி பயன்பாடு மாணவா்களிடையே அதிகரித்துகிவிட்டது. தொழில்நுட்ப வளா்ச்சியை நமது முன்னேற்றத்துக்கு மட்டும் பயன்படுத்துவது அவசியம். பள்ளி மாணவா்கள் கைப்பேசி தொழில்நுட்பத்தை தவறான முறையில் செயல்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அத்துடன் கைப்பேசியில் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீனமானவற்றை பயன்படுத்துவது குறித்தும் கையேடு வெளியிடப்பட்டுள்ளதால், அதை மாணவா்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவா் (கல்வி) த.விஸ்வநாதன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி முதல்வா் ஸ்டெல்லா மேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.