மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
பள்ளி மாணவா்களுக்கு பேச்சுக் கலைப் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பேச்சுக் கலைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். சிவகாசியைச் சோ்ந்த கட்டட பொறியாளா்கள் நாகராஜன், விவேகானந்தன், வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மனிதவள பயிற்சியாளா் சிவபிரான், பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களை மட்டும் படிப்பதோடு நின்றுவிடாமல் நமது திறமையை வளா்க்க ஏதாவது ஒரு போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றாா்.
முடிவில் ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.