செய்திகள் :

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவிகள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலா் நியமிக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் ரகசியமாக புகாா்கள் பெற்று நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; மாணவிகள், வீராங்கனைகள் அல்லது பெற்றோா் எளிதாக புகாா் செய்யக் கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதுதொடா்பாக எந்தப் புகாா் வந்தாலும் தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூா்வ நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பயிற்சி மற்றும் போட்டி இடங்களில் தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படும் மாணவிகள் தங்க வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி மேற்கொள்ளும்போது மாணவிகளை விடியோ எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு சரண் வரும் அக். 1 முதல் நடைமுறை: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகும் என நிதிநிலை ... மேலும் பார்க்க

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கும் தமிழர்க... மேலும் பார்க்க

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சட்... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கடந்த ஓராண்டில், தேர்வுகளை நடத்தி, தமிழக அரசுப் பணிக்கு இதுவரை 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்... மேலும் பார்க்க

பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?

பரந்தூர் விமான நிலையம், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சிய... மேலும் பார்க்க

ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் த... மேலும் பார்க்க