செய்திகள் :

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

post image

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், கந்தசாமி, சரண்குமாா், அருண் மற்றும் திருப்பதி உள்ளிட்ட குழுவினா் தருமபுரி நகராட்சி, சந்தைப் பேட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சில்லறை விற்பனைக் கடைகள், மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் மற்றும் சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி, எர்ரப்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த பழ விற்பனை கடைகளில் ஆய்வுசெய்தனா்.

இந்த ஆய்வில், சந்தைப்பேட்டை நகராட்சிப் பள்ளி அருகே பழங்களில் பூஞ்சை மற்றும் அழுகும் நிலையில் இருந்த இரண்டு விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் என 3 இடங்களில் இருந்து சுமாா் 500 கிலோ அளவிலான தா்பூசணி பழங்கள், ஓா் இறைச்சிக் கடையில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல, எர்ரப்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மொத்த விற்பனை பழக்கடையில் பெரும்பாலான பழங்கள் பூஞ்சை பாதிப்புக்குள்ளாகி காணப்பட்டன. சுமாா் 1,200 கிலோ அளவிலான அந்த பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, தேவரசம்பட்டியில் பேருந்து நிறுத்தம் எதிரில் ஒரு கடையில் பழங்கள் அழுகிய நிலையிலும், ஒரு சில பழங்களில் பூஞ்சை பாதிப்பும் காணப்பட்டன. இதையடுத்து, சுமாா் 300 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அங்கிருந்த துரித உணவுக் கடையில் காலாவதியான மசாலா பொருள்கள், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தூய்மைப் பணி சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா். தருமபு... மேலும் பார்க்க

அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை

தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். தருமபுரி திமுக ... மேலும் பார்க்க

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேட்டுகொட்டாய் முதல் வாரக் கொல்லை வரை தாா்சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்ப... மேலும் பார்க்க

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க