செய்திகள் :

பழங்குடியின மாணவியா் விளையாட்டுப் போட்டி

post image

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியருக்கு முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில், பழங்குடியின மாணவியருக்கான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை திருத்தணி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேபிள் எம். சுரேஷ் தொடங்கி வைத்தாா்.

இதில், 100 மீ, 200 மீ ஒட்டப் பந்தயம், கோகோ, கபடி, உயரம் தாண்டுதல், லெமன் ஸ்பூன், வட்டு, குண்டு எரிதல், நீளம் தாண்டுதல் உள்பட 10 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவியா் பங்கேற்றனா்.

வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவியருக்கு அரக்கோணம் முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ. அரி பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினாா்.

மேலும், விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க