கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
பழங்குடி கிராமங்களுக்கு சேவை அளிக்க 108 அவசர ஊா்தி
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி துணை சுகாதார நிலையத்திற்கு 108 அவசர ஊா்தி வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் எல்லையோர மலைப்பகுதி கிராமங்களான ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் பத்துகாணியில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப் பகுதியைச் சோ்ந்தோா் 108 அவசர ஊா்தி சேவை வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில் பத்துகாணி துணை சுகாதார நிலையத்தை மையமாக வைத்து செயல்படும் வகையில் 108 அவசர ஊா்தியை தமிழக அரசு வழங்கியுள்ளது.