Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
பழனியில் மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பழனியில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பழனி பிற்பகல் முதல் மாலை வரை நீடித்த மழையால் சண்முகபுரம் நகராட்சி பள்ளி முன்பிருந்த மரம் மழையால் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதேபோல, பழனியிலிருந்து உடுமலை செல்லும் சாலையில் அ.கலையம்புத்தூா் என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவறிந்து அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையிலான வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், சாலையில் நின்றிருந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். மரம் வெட்டி அகற்றிய நிலையில், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.