செய்திகள் :

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

post image

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், புளியரை புதிய காவல் நிலைய கட்டுமான பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த நிலையில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உறுதிமொழி குழு ஆய்வு

தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வேல்முருகன் கூறும் போது, “நிலுவையில் உள்ள 117 உறுதிமொழிகளில் இன்றைய தின ஆய்வின் போது 26 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது" என்றார்.

மேலும், பழைய குற்றால அருவி யார் வசம் உள்ளது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“பழைய குற்றால அருவியை பொறுத்தவரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதா அல்லது வனத்துறைக்கு சொந்தமானதா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இது மாநில அளவிலான பிரச்னையாக கருதப்பட்டு, இரண்டு துறை செயலாளர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம் எனவும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உறுதிமொழி குழு ஆய்வு

மேலும், "இரண்டாம் நாள் ஆய்வில், புகழ்பெற்ற குற்றாலம் அருவிக்கு நாடு முழுவதிலிமிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அங்கு பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதாகவும், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாகவும், பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து குழுவிற்கு பல்வேறு புகார்களும், கோரிக்கைகளும் வந்த நிலையில் இன்று அருவியை நேரில் பார்வையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தோம்" என்றார்.

`விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ - ஸ்டாலின் சொன்ன பதில்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ... மேலும் பார்க்க

தென்காசி: "ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க" -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகள... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனி... மேலும் பார்க்க

`எப்படி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு?' - அமைச்சர் மா.சு விளக்கம்

கடந்த 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்... மேலும் பார்க்க

`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்திலேயே கிடையாது. இந்தமாதிரி ஊரு எங்கயாச்சும் உண்டா? ஏங்க... தனி ஐலாண்டுங்க. அங்கப் பாருங்க, காஷ்மீர் மாதிரி இ... மேலும் பார்க்க

``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத் பேசியது என்ன?

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த... மேலும் பார்க்க