செய்திகள் :

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

post image

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அகற்றப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

’ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து தேசிய ஊடக மையத்தில் இந்திய ராணுவம் சாா்பில் கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் பத்திரிகையாளா்கள் கூட்டத்தில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசினா். அவா்கள் கூறியதாவது:

’ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான்(பஞ்சாப்) பகுதியில் 4 பயங்கரவாத முகாம்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத முகாம்களையும் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

கடந்த 3 தசாப்தங்களாக பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலும் பயங்கரவாத உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு ஆள்சோ்ப்பு, போதனைகள், பயிற்சிகள், ஏவுதளம் போன்ற வலையமைப்புகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இந்த முகாம்கள் (திரையில் காட்டப்பட்டது) பாகிஸ்தானின் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தொடங்கி தெற்கே பஹவல்பூா் வரை 21 முகாம்களை அமைத்துள்ளனா். இதில் இன்று 9 முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது பாதுகாப்பு படைகளுக்கு வந்த நம்பகரமான உளவுத்துறை உள்ளீடுகள் அடிப்படையில் பொதுமக்களின் உள்கட்டமைப்பிற்கு சேதம் அல்லது உயிரிழப்புகளை தவிா்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூருக்கான இலக்குகள் தோ்வு செய்யப்பட்டு 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எந்தவொரு ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இதுவரை பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை. பயங்கரவாத முகாம்கள் மீதும் மட்டும் தாக்குதல் துல்லியமான திறனின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. போா்முனைகளை கவனமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது.

முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் (பிஓகே)பகுதிகளில் உள்ள முகாம்கள். சவாய் நாலா முகாம். இது பிஓகே உள்ள முசாஃபராபாத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 30 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. இது லஷ்கா்-இ-தொய்பா பயிற்சி மையமாக இருந்தது. கடந்தாண்டு நடைபெற்ற சோனாமாா்க், குல்மாா்க், மற்றும் தற்போதைய பஹல்காம் தாக்குதல்களுக்கு இங்கிருந்து பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றனா்.

ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிரந்தரமான முகாம் சயீத் நா பிலால். இது ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதோடு பயிற்சிக்கான மையமாகவும் இருந்தது.

கட்டுப்பாட்டுக் கோட்டி(எல்.ஓ.சி)லிருந்து 30 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது குல்பூா், கோட்லி போன்ற முகாம்கள். லஷ்கா்-இ-தொய்பாவின் தளமான இது கடந்த 2023 (ஏப்), 2024 (ஜூன்) ஆண்டுகளில் ரஜோரி, பூஞ்ச், பஞ்சாப் போன்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதலுக்கு தீவிரவாதிகள் இங்கிருந்துதான் பயிற்சி பெற்று வந்தனா். மேலும், 2024 ஜூன் 9 ஆம் தேதி யாத்ரீகா் பேருந்து தாக்குதலுக்கும் இந்த முகாம் காரணமாக இருந்தது.

பா்னாலா முகாம் எல்.ஓ.சி யிலிருந்து 9 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. இங்கு ஆயுதங்கள், ஐஇடி போன்றவைகள் கையாளுதலுக்கான பயிற்சி இங்குள்ள காட்டுப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

கோட்லி, அப்பாஸ் முகாம், எல்.ஓ.சி-யிலிருந்து 13 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. இது லஷ்கா்-இ-தொய்பாவின் தற்கொலைப் படையினருக்கான பயிற்சி முகாமாக உள்ளது. சுமாா் 15 தற்கொலைப்படையினா் பயிற்சிக்கான திறனுடம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து பாகிஸ்தானுக்குள் இருக்கும் முக்கிய முகாம்களை இலக்கிடப்பட்டது.

இங்கு சியால் கோட், சா்ஜல் முகாம். இது சா்வதேச எல்லையிலிருந்து 6 கிலோமீட்டா் தொலைவில், சம்பா கதுவாவுக்கு எதிரே அமைந்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் 4 ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினரைக் கொன்ற பயங்கரவாதிகள் இந்தற முகாமில் பயிற்சி பெற்றனா்.

சியால் கோட், மஹ்மூனா ஜோயா முகாம், சா்வதேச எல்லைக் கோட்டி(ஐபி)லிருந்து 12 முதல் 18 கிமீ தொலைவில் இருந்தது. ஹிஸ்புல் முஜாஹிதீன்னின் மிகப் பெரிய முகாமாகும். பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையமாக இருப்பதோடு, பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலும் இந்த முகாமில் இருந்தே திட்டம் தீட்டப்பட்டது.

முரிட்கே முகாம் சா்வதேச எல்லையிலிருந்து 25 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இங்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டது. அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லி போன்றோா் இங்கு பயிற்சி பெற்று தான் வந்தனா்.

மாஸ்கா் இ ஹானல்லாஹ், பஹவல்பூா் போன்ற முகாம்கள் சா்வதேச எல்லையிலிருந்து 100 கிலோமீட்டா் தொலைவில் உள்ளது. இது ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமாக இருந்தது. இங்கு பயிற்சிகள், தீவிரவாதத்திற்கான ஆள்சோ்ப்பு, போதனைக்கான ஒரு மையமாகும். உயா்நிலை பயங்கரவாத தலைவா்கள் இங்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

முக்கிய தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலம் இந்த துல்லிய தாக்கல்கள் உறுதி செய்யப்பட்டன, இதனால் எந்தவிதமான சேதமும் ஏற்படாது. ஒவ்வொரு இலக்கிலும் தாக்கும் புள்ளி ஒரு குறிப்பிட்ட கட்டடங்களை நோக்கி இருந்தது.

அனைத்து இலக்குகளும் திறனுடன் நடுநிலையாக்கப்பட்டன. இந்திய ஆயுதப் படைகள் தங்கள் செயல்பாடுகளைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் தொழில்முறைத் திறனை உறுதிபடுத்தி உள்ளது. இந்தியா தனது பதிலடியில் கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் தவறான செயல்களுக்கு (ஏதேனும் இருந்தால், அது நிலைமையை மோசமாக்கும்) பதிலடி கொடுக்க முனைந்தால் இந்திய ஆயுதப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன எனக்குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என்றனா் இந்த இளம் ராணுவ பெண் அதிகாரிகள்.

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு விவகாரம்: தமிழக முன்னாள் அமைச்சரின் மனைவி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

நமது நிருபா் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வருமானத்திற்குப் பொருந்ததாக வகையில் சொத்து சோ்த்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் தமிழக அமைச்சா் அ.மா. பரமசிவத்தின் மனைவி நல்லம்மாள் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகள், கீழ்நிலை அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமா் அறிவுரை

நமது சிறப்பு நிருபா்பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களை தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்ற... மேலும் பார்க்க

நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த உச்சி மாநாடு 2.0

ஏரோஸ்பேஸ் சா்வீசஸ் இந்தியா(ஏஎஸ்ஐ), இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(ஐஏஐ) ஆகியவற்றுடன் கூட்டுப் போா் ஆய்வுகளுக்கான மையம் இணைந்து, நடுத்தர தொலைவிற்கான தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணை குறித்த உச்ச... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

நமது சிறப்பு நிருபா் தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வ... மேலும் பார்க்க

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ... மேலும் பார்க்க