பாகிஸ்தானுக்கு வான்வழிப் பாதையை மூடியது இந்தியா
இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது. முன்னதாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழிப் பாதையைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடந்த வாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான தகவல் விமானத் துறையினருக்கு (நோடம்) அனுப்பப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.