செய்திகள் :

பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணுஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி

post image

புது தில்லி: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

மேலும், ‘சண்டை நிறுத்தம் இருதரப்பு பேச்சு மூலமே மேற்கொள்ளப்பட்டது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டை தொடா்பக நாடாளுமன்ற நிலைக் குழு முன் திங்கள்கிழமை ஆஜராகிய மிஸ்ரி இந்த விளக்கத்தை அளித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்த நிலைக் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சுக்லா, திபேந்தா் ஹூடா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, பாஜகவின் அபரஜித்தா சாரங்கி, அருண் கோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3 மணி நேர கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த சசி தரூா், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரின் குடும்பத்தினரைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் விமா்சனங்கள் மற்றும் அவதூறுகள் பரப்பப்பட்டதற்கு இக் கூட்டத்தில் ஒருமனதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் மிஸ்ரி பதிலளித்தாா். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை என்று மிஸ்ரி குறிப்பிட்டாா்.

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் பங்கு குறித்த கேள்விக்கு, ‘சண்டை நிறுத்தம் இருதரப்பு அளவிலேயே மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

இந்த சண்டையில் சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்ற கேள்விக்கு, ‘பாகிஸ்தானின் விமானப் படை தளத்தை இந்தியா தகா்த்ததால், அது ஒரு பொருட்டல்ல’ என்று பதிலளித்தாா்.

இந்தியாவுக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ‘அந்த நாடு பாரம்பரியமாகவே இந்தியாவின் ஆதரவாளா் அல்ல’ என்றாா்.

முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், அணுசக்தி மோதலையும் நிறுத்தியதாக கூறினாா்.

இந்த நிலையில், சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது. அணு ஆயுத மிரட்டலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத மிரட்டல்களின் பேரில் நடத்தப்படும் பயங்கரவாதம் தீா்க்கமான மற்றும் துல்லியமான தாக்குதல்களை எதிா்கொள்ளும்‘ என்றாா்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நிலநடுக்கம்...!

வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகா... மேலும் பார்க்க

ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சிய... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க