செய்திகள் :

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

post image

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் மத்திய அரசு சனிக்கிழமை தடை விதித்துள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

பாகிஸ்தானில் இருந்து அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை நிறுத்த வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

முன்னதாக இன்று பாகிஸ்தானுடன் நேரடி மற்றும் மறைமுக இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பாவிகளைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்; சரியான பதிலடி: ராஜ்நாத் சிங்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்... மேலும் பார்க்க

ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மேலும் பார்க்க

3 ரஃபேல் உள்பட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

இந்திய விமானப் படையின் 5 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்தியை இந்திய அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆ... மேலும் பார்க்க