Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!
ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே 7 முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து 88 மணி நேரம் ஆபரேஷன் சிந்தூர் போர் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த மூன்று பயங்கரவாத இயங்கங்களைச் சேர்ந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. சில, பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தப்போரில் பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமெரிக்க துறை சார்ந்த அதிகாரிகள், பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து, பாகிஸ்தானிடம்தான் இதனைக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தும், தங்கள் நாட்டு உற்பத்தியான எஃப் - 16 ரக போர் விமானங்களின் நிலை குறித்து அவர்கள் பேச மறுத்துள்ளனர்.
இஸ்லாமாபாத் - வாஷிங்டன் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப் - 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த ரக போர் விமானங்களை பராமரிக்கவும், நிலைத்தன்மைக்காகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பக் குழுவின் நீடித்த உதவியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது. எனினும், போர் குறித்த நேரடித் தகவல்களை அறிந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள், எஃப் - 16 உள்பட எந்தவொரு போர் விமானமும் காணாமல்போகவில்லை எனக் குறிப்பிட்டனர்.
தற்போது, எஃப் - 16 ரக போர் விமானங்கள் குறித்து பாகிஸ்தானிடம்தான் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க |குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி