மதுரை ரயில் நிலையத்தில் விடப்பட்ட ஆண் குழந்தை போலீஸாரிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று (ஏப்.30) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும், ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான சூழலில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டு காவல் துறையினர் கூறுகையில், அந்தக் குழந்தைகள் அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அப்பகுதியைக் கடந்ததினால் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க:ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாராயத்துக்கு 8 பேர் பலி