செய்திகள் :

பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!

post image

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் கடுமையாக குலுங்கிய நிலையில், அதன் முகப்பு பகுதி பலத்த சேதமடைந்தது.

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி புதன்கிழமை மாலை இண்டிகோ நிறுவனத்தின் 6இ 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது.

இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியுள்ளது. தொடர்ந்து ஸ்ரீநகரில் தரையிறக்குவதற்கு முன்னதாக ஆழங்கட்டி மழையில் சிக்கிய விமானம், கடுமையாக குலுங்கியதால் பயணிகள் அலறியுள்ளனர்.

மேலும், விமானத்தின் முகப்பு பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்த விமானத்தில் திரிணமூல் காங்கிரஸின் 5 நிர்வாகிகள் உள்பட 227 பயணிகள் பயணித்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

பாகிஸ்தான் நிராகரிப்பு

மோசமான வானிலையில் இண்டிகோ விமானம் சிக்கியது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ”விபத்துக்குள்ளான இண்டிகோ விமானம் அமிர்தசரஸ் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலையை கவனித்த விமானி, லாகூர் விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், லாகூர் கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்த நிலையில், தொடர்ந்து மோசமான வானிலையில் பறக்க வேண்டிய கட்டாயத்துக்கு விமானி தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய விமானம் கடுமையாக குலுங்கியதால் முன்பகுதி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, ஸ்ரீநகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அவசர எச்சரிக்கை எழுப்பியும் இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இத... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பா... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வா் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்தமாநில பேரவைச்... மேலும் பார்க்க