செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இவர் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்து, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு தஹாவூர் ராணா நாடுகடத்தப்பட்டார்.

தஹாவூர் ராணா வாக்குமூலம்

தஹாவூர் ராணாவை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆழமான தொடரபை தஹாவூர் ராணா வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதல் நடந்த சமயத்தில் தான் மும்பையில் இருந்தது தற்செயலானது கிடையாது, தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் தாக்குதல் நடத்திய இடத்தை முன்னதாகவே உளவு பார்த்ததாகவும் தஹாவூர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தானும் டேவிட் ஹெட்லியும் லஷ்கா்-இ-தொய்பாவின் பயற்சியைப் பெற்றதையும், மும்பை தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா முதன்மை உளவு அமைப்பாக செயல்பட்டு, ஐஎஸ்ஐ அமைப்புடன் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை மேற்கொண்டதாக மும்பை குற்றப்பிரிவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்பு

கலீஜ் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தால் தான் செளதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதை ராணா ஒப்புக்கொண்டுள்ளார். இது ராணாவுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையேயான நீண்டகால தொடர்பை உறுதி செய்துள்ளது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மும்பை காவல்துறையினர் ராணாவை கைது செய்து காவலில் எடுப்பதற்கான பணிகளை விரைவு படுத்தியுள்ளது.

Tahawur Rana has given a Confession regarding the connection between the Mumbai terror attack and the ISI.

இதையும் படிக்க : ஒரு நாள் கூட வேலை செய்யாமல் 12 ஆண்டுகள்.. ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்!

ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு

மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ ... மேலும் பார்க்க

கரடி தாக்கி 3 போ் உயிரிழப்பு

சீதி: மத்திய பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘சஞ்சய் காந்தி பு... மேலும் பார்க்க

ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!

சேனா விருது உள்பட உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதே போல் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அக்னிவீரா்களும் 4 ஆண்டுகால ... மேலும் பார்க்க

‘பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

புது தில்லி: ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகு... மேலும் பார்க்க

பங்குச் சந்தை குறித்து அச்சத்தைப் பரப்புகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட... மேலும் பார்க்க

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் கட்கரி

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். மேலும், நமத... மேலும் பார்க்க