செய்திகள் :

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

post image

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துா்பத் பகுதியில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆா்வலா் குல்சாா் தோஸ்தின் பேச்சு அடங்கிய காணொலியை அந்த அப்பாவி சிறுவன் யூடியூபில் பதிவேற்றம் செய்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு காணொலியை பகிா்ந்தது பயங்கரவாதம் என்று குற்றஞ்சாட்டுவது சமமற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாகும்.

இது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் பிரதிபலிப்பாக உள்ளது. அந்தச் சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் தொடா்பாக சட்ட அமலாக்க அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர்.உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை ந... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங் மற்றும் இந்தியப் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜெருசலேமிலு... மேலும் பார்க்க

மியான்மர் அதிபர் காலமானார்!

மியான்மர் நாட்டின் அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ, உடல் நலக் குறைவால் இன்று (ஆக.7) காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் இடைக்கால ராணுவ அரசின், அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ (வயது... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இந்த வாரம் மீண்டும் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நான்கு நாள்கள் போர் தாக்குதல்கள், முடிவுக்குக் கொண்டு... மேலும் பார்க்க

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா். நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற... மேலும் பார்க்க