பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை மையக்கருவாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக பாக்கியலட்சுமி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: இயக்குநராகும் ரவி மோகன்!
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடர் வழக்கமாக இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், வரும் திங்கள்கிழமை(மார்ச். 17) முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
அய்யனார் துணை தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் இரவு 8.30 மணிக்கு அதாவது பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
கணா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த அரவிந்த் சேஜு மற்றும் எதிர்நீச்சல் தொடர் பிரபலம் மதுமிதா ஆகிய இருவரும் பிரதான பாத்திரங்களில் நடித்துவரும் தொடர் அய்யனார் துணை.
இத்தொடரின் டிஆர்பி புள்ளிகளை உயர்த்துவதைக் கருத்தில்கொண்டு நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.