பாக். டெஸ்ட் தொடர்: தெ.ஆ. அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலாவது ஒருநாள் போட்டியில் அயூப் சைமின் அசத்தலான சதத்தால் தோல்வியைத் தழுவியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்கான போட்டியில் இருந்து மற்ற அனைத்து அணிகளும் விலகிவிட்ட நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நீடிக்கின்றன.
இதையும் படிங்க |கேசவ் மகராஜ் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு!
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றில் வெற்றிபெற்றாலும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் முனைப்பில் இருக்கிறது.
ஒருநாள் தொடரில் காயத்தால் விலகியுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணிக்கு திரும்புவது முக்கியமானதாக இருக்கும்.
முதல் தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்பின் போஸ் மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 விக்கெட்டுகளை வீழ்த்திய குவேனா மபாகா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க |பிபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி!
இலங்கைக்கு எதிரான தொடரில் கட்டைவிரல் காயத்தால் அணியில் இருந்து விலகிய ஆல்-ரவுண்டர் வியான் முல்டர் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், மேத்யூ ப்ரீட்ஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டி அட்டவணை
முதலாவது டெஸ்ட் - டிசம்பர் 26-30 (செஞ்சூரியன்)
2-வது டெஸ்ட் - ஜனவரி 3-7 (கேப்டவுன்)
தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், குவேனா மபாகா, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் டிக்கெல்டான், டிரிஸ்டன் முத்ஸ்டப்ஸ், கை வெரைன்.