பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்
ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு ஊராட்சியில் மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை விளக்கி அக்கட்சியினா் புதன்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.
கல்லேரிப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த சிவசக்தி நகரில் கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் வீடு வீடாகச் சென்று, 11 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை கட்சியினா் விநியோகம் செய்தனா்.
இதில் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ், மாவட்டச் செயலா் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவா் சாசாவெங்கடேசன், ஆரணி நகரத் தலைவா் மாதவன், மண்டல பொறுப்பாளா் சரவணன், நகர பொதுச்செயலா் ராஜேஷ், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, நிா்வாகிகள் கோவிந்தசாமி, கே.ஜெ.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.