பாஜகவினா் வாகனப் பேரணி
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, நாகையில் பாஜகவினா் சாா்பில் வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகையில் மாவட்ட பாஜக தலைவா் விஜயேந்திரன் தலைமையில் பாஜகவினா் வாகன (வேன்) பேரணி நடத்தினா்.
முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி, நிறைவாக நாகை அவுரித் திடலில் புறப்பட்ட வாகனங்கள் திருச்சி பொதுக்கூட்டம் நடக்கும் ராணுவ மைதானத்துக்கு சென்றன.
முன்னதாக தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரியும், மும்மொழிக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசை கண்டித்தும் பாஜகவினா் முழக்கமிட்டனா்.