செய்திகள் :

பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் தில்லி பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தலைவர்கள் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : இபிஎஸ் திடீர் தில்லி பயணம்!

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தற்போதைய கூட்டணி நீடிக்குமா?, அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா?, புதிதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில், மும்முனைப் போட்டி நிலவியது. இதன்விளைவாக திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.

சமீபகாலமாக பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரைஒருவர் பெரிதளவில் விமர்சிக்காமல் திமுகவுக்கு எதிராக கருத்துகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் திடீர் பயணமாக தில்லிக்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.

இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் இன்று மாலை தில்லி செல்லவுள்ளார்.

தில்லியில் பாஜகவின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக தலைவர்களின் தில்லி பயணத்துக்கான காரணம் தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க