செய்திகள் :

பாஜக எம்எல்சி சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜன.30 வரை நடவடிக்கைக்கு தடை

post image

பெங்களூரு : ‘பாஜகவைச் சோ்ந்த சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜனவரி 30-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

கா்நாடக சட்டமேலவை அமா்வின்போது மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் லக்ஷ்மி ஹெப்பால்கருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவா் கடந்த மாதம் 19-ஆம் தேதி பெலகாவி காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். ஆனால், கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து மறுநாள் அவா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரவி தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சட்டமேலவையில் நடைபெற்ற இந்த விவகாரத்தில் ரவிக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.வி.நாகேஷ் வாதிட்டாா்.

இதையடுத்து, அரசு வழக்குரைஞா் பி.ஏ.பெல்லியப்பா முன்வைத்த வாதத்தில், சட்டமேலவையில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இயல்பாகவே சட்ட பாதுகாப்பு கிடையாது. அத்தகைய குற்றங்கள் சட்டரீதியாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘இந்த விவகாரம் சட்டமேலவைத் தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் மட்டும் வருமா? அல்லது காவல் துறையும் விசாரிக்க முடியுமா? என்பதைத் தீா்மானிக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு இப்போது உள்ளது. அடுத்த விசாரணை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றாா்.

ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவான பல்ஜீத் சிங்குக்கு எதிரான பணமோசடி விசாரணையில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் தௌசா மற்றும் ஹரியாணாவி... மேலும் பார்க்க

இருவருக்கு மறுவாழ்வு! மூளைச்சாவு அடைந்த பூசாரியின் உறுப்புகள் தானம்!

மத்திய பிரதேசத்தில் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட கோயில் பூசாரியின் உடல் உறுப்புகள் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான பலிராம்... மேலும் பார்க்க

மம்தா பானா்ஜியுடன் ஒரே மேடையில் பாஜக தலைவா்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

அலிபூா்துவாா் : மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜான் பா்லா, முதல்வா் மம்தா பானா்ஜியுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது அந்த மாநில அரசியலில் பரபர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ரயில் மோதிய சம்பவம்: உயிரிழந்த பயணிகளில் 7 போ் நேபாளிகள்

ஜல்கான்/மும்பை : மகாராஷ்டிரத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது ரயில் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரி... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்ததது ‘என்டிடிவி’ கடன்முறைகேடு வழக்கு: சிபிஐ அறிக்கையை தில்லி நீதிமன்றம் ஏற்பு

‘என்டிடிவி’ நிறுவனத்துக்கு எதிராக கடன்முறைகேடு குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது. 2008-ஆம் ஆண்டில் என்டிடிவி நிறுவ... மேலும் பார்க்க

கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான கொள்கைப் பணிகள் நிறைவு -அமித் ஷா

அகமதாபாத் : ‘கடந்த 10 ஆண்டுகளில், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து உள்பட பெரும்பாலான கொள்கைப் பணிகளை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவு செய்துள்ளது; மூன்றாவது பதவிக் காலத்திலும் அதே ... மேலும் பார்க்க