செய்திகள் :

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

post image

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் ‘சுயமரியாதைக்காரர்‘ எனத் தன்னை அடையாளப்படுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான்.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.

உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ruling DMK president and Tamil Nadu Chief Minister M K Stalin on Sunday hit out at his party's archrival, the AIADMK for renewing ties with the BJP, claiming 'true' workers of the party were not happy with the alliance.

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.4) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிகாா் வாக்காளா்கள்? - தோ்தல் ஆணையம் மறுப்பு

தமிழகத்தில் பிகாரைச் சோ்ந்த 6.5 லட்சம் போ் வாக்காளா்களாக சோ்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது.பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதிய... மேலும் பார்க்க

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க