செய்திகள் :

பாஜக - திமுக மறைமுக கூட்டணி: தவெக

post image

பாஜக - திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை. அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

இதையும் படிக்க: டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்தான்: அண்ணாமலை

தற்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க. - தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கட்சித் தலைவர் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது, இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, மத்திய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் வழியில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோா் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைத... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாள்கள் அதிகரிக்க வேண்டும்: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை

நமது நிருபா் புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (மன்ரேகா) வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்... மேலும் பார்க்க

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

நமது நிருபா் புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா். இது ... மேலும் பார்க்க

கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

புது தில்லி: வரும் 2028-இல் மகாமகம் திருவிழா நடைபெற உள்ளதால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனாா்) கட்சி... மேலும் பார்க்க

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழம... மேலும் பார்க்க