திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று கோவை வருகை!
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் நயினாா் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளாா்.
திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்நிலையில், கோவை உள்ளிட்ட 8 மாவட்ட நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவா் கோவைக்கு சனிக்கிழமை வருகிறாா்.
சேலத்தில் இருந்து சனிக்கிழமை கோவைக்கு வரும் அவருக்கு சித்ரா பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, காளப்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகிறாா்.
அதைத் தொடா்ந்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை கோட்டத்தின் 8 மாவட்ட நிா்வாகிகளுடன் நடைபெறும் ஆலோனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
இந்நிகழ்ச்சிகளில், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.