செய்திகள் :

பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் பாகிஸ்தான்: பின்னணியில் என்ன நடக்கிறது?

post image

பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்ன நடக்கிறது? என்பதை உலக அரசியல் நகர்வுகளைப் பார்த்தால் தெளிவாகவே புலப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...

பல கோடிகள் கடனில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எஃப்.) நிதியுதவி முதுகெலும்பாக விளங்குகிறது. கடந்த 2023முதல், ஐ.எம்.எஃப்.-இன் நிதியை நம்பியே பாகிஸ்தானின் பெரும் பகுதி செலவினம் நடைபெறுகிறது. கடந்தாண்டு செப்டம்பரில், ஐ.எம்.எஃப். 7 பில்லியன் டாலர் தொகையை பாகிஸ்தானுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்தது. சுருக்கமாகச் சொல்வதானால், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஐ.எம்.எஃப். கையில்...

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.

மேற்கண்ட நிதியால் அந்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், பாகிஸ்தான் அரசால் தமது உள்நாட்டு வருவாயை ராணுவத்துக்கு ஒதுக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழிவகை செய்கிறது.

கடந்த 1958-ஆம் ஆண்டுமுதல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் 20-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் உற்ற துணையான சீனா...

பாகிஸ்தானின் ராணுவத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்குவதில் சீனா இறுக்கமாகக் கைகோர்த்து நிற்கிறது.

தமக்கு பக்கபலமாக இருக்கும் சீனா உள்ளிட்ட தோழமை நாடுகளிடமிருந்து 2024-25 நிதியாண்டில் சுமார் 12 பில்லியன் டாலர் கடன் வாங்க பாகிஸ்தான் முனைப்பு காட்டியுள்ளது. தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு சீனாவை அதிகம் சார்ந்திருக்கிறது பாகிஸ்தான்.

கடந்த காலங்களில் சீனாவிடமிருந்து பல கோடிகள் கடன் பெற்றுள்ள பாகிஸ்தானின் மொத்த கடனில் மூன்றில் ஒருபங்கு சீனாவிடமே பெறப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள்...

மேற்காசியாவிலுள்ள வளைகுடா நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக பெரும் நிதியுதவி கிடைக்கிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் பாகிஸ்தானின் மத்திய வங்கிக் கணக்கில், 2 பில்லியன் டாலர் தொகையை சவூதி அரேபியா செலுத்தி நிதியுதவியளித்தது. கடந்தாண்டு டிசம்பரில், மேலும் 3 பில்லியன் டாலர் வழங்கியது சவூதி அரேபியா.

அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் 1 பில்லியன் டாலர் செலுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரியிலும் இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் 2 பில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, மேற்கண்ட நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இன்னொருபுறம், பயங்கரவாத குழுக்களுக்கும் ஆதரவளித்து தமது எதிரி நாடுகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை ராணுவ உதவியுடன் அஸ்திரமாக பயன்படுத்தி வருவதும் வெளிப்படையாக அந்நாட்டின் அமைச்சர்களாலும் கடந்த காலங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!

ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவ... மேலும் பார்க்க

ஜெர்மனி யூதர்களை உளவுப் பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனு... மேலும் பார்க்க

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும்! - மஸ்க்கிடம் டிரம்ப் கறார்

கடையை மூடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும் என்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் பணக்காரர் வரிசையில் முன்னணியில் உள்ள ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா பயணம்! 7 மாதங்களில் 3வது முறை..!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரான... மேலும் பார்க்க

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க