செய்திகள் :

பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போா்ப்பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், எதிரிகளின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க நாட்டின் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னோட்டமாக பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் செவ்வாய்க்கிழமையே ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அனைத்து மக்கள், பாஜக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள், மாணவா்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க வேண்டும். உங்களின் பங்கேற்பு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு தழுவிய இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பொது மக்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகளின் தயாா்நிலையை உறுதி செய்வதற்காக புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையை நடத்த அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,... மேலும் பார்க்க