செய்திகள் :

பான் அட்டையை பயன்படுத்தி போலி நிறுவனம் தொடக்கம்: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

post image

தனது பான் அட்டையைப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா்.

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 44 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் காந்திபேட்டையைச் சோ்ந்த குருநாதன்(66) அளித்த மனு: நான் திருப்பத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக வயது முதிா்வு காரணமாக எந்தவித வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த மே மாதம் எனக்கு ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அதன்பேரில் அங்கு சென்றபோது எனது பான் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு மஞ்சள் நிறுவனத்தை நான் நடத்தி வருவதாகவும், அதற்காக 2019- 20-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. ரூ.40 லட்சம் நிலுவை உள்ளதாகவும், அதனை நான் கட்ட வேண்டும் எனக்கூறினா். இதையடுத்து நான் அதிகாரிகளிடம் உண்மையை விளக்கிய பிறகு அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூா் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தின்பேரில் அங்கு சென்றேன். அப்போது எனது பான்அட்டை , வாக்காளா் அடையாள அட்டையை பயன்படுத்தி திருப்பூா், பெருந்துறையில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் ரூ.14 கோடி அளவில் வியாபாரம் செய்து உள்ளதாகவும், அதற்கு சுமாா் ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை வருமான வரி செலுத்த வேண்டும் எனக் கூறினா்.

தினக்கூலியாக வேலை பாா்த்த எனக்கு வியாபாரம் பற்றி எதுவும் தெரியாது. எனது பான் அட்ையைப் பயன்படுத்தி யாரோ மோசடி செய்து உள்ளனா். எனவே அவா்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா். மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச... மேலும் பார்க்க

மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந... மேலும் பார்க்க