பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடித் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் கருத்தபாண்டி (24) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனின் பரிந்துரை, ஆட்சியா் ரா. சுகுமாரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், கருத்தபாண்டியை காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் சனிக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்தாா்.