செய்திகள் :

பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நம்மோடு வருவார்கள்! - எடப்பாடி பழனிசாமி

post image

பாமகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நம்மோடு வருவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. மும்முனைப் போட்டியா? அல்லது நான்கு முனைப் போட்டியா? என்றும் யார் யார் கூட்டணி என்றும் பரபரப்பு தொற்றத் தொடங்கியிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “1999-ல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதேபோன்று 2001 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. நீங்களும்(திமுக) காங்கிரஸுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும்(அதிமுக) கூட்டணி வைத்தோம்.

நீங்களும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தோம். நீங்கள் பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். இப்போது நாங்கள் பாமகவுடன் கூட்டணியில் உள்ளோம். அவர்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கின்றனர்.

அவர்கள் நிச்சயமாக நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். நீங்க எந்தெந்த கட்சியோட தேர்தல் நேரத்தில் கூட்டணி வச்சீங்களோ, நாங்களும் அந்தந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. மக்களவைத் தேர்தலைப் போல எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டார் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருக்கு பயம் வந்துவிட்டது” என்றார்.

PMK will also join us in the National Democratic Alliance! - Edappadi Palaniswami

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க

ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு

ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர ... மேலும் பார்க்க

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புத... மேலும் பார்க்க

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வ... மேலும் பார்க்க