பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
பாரதிதாசன் பல்கலை. கல்லூரிகளிடையே தடகளப் போட்டி தொடக்கம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 42-ஆவது தடகள விளையாட்டு விழா திருச்சியில் திங்கள்கிழமை தொடங்கியது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு இடையே ஆண்டுதோறும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சாம்பியன் கோப்பை வழங்கப்படுகிறது.
இதன்படி, 42-ஆவது தடகள விளையாட்டு விழா திருச்சியில் தொடங்கியது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 8 மாவட்டங்களில் இருந்து 64 கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
போட்டிகளை, பல்கலைக்கழக துணைவேந்தா் ம. செல்வம் தொடங்கி வைத்தாா். பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் என். சுமதி, முனைவா் பி. புவனேஸ்வரி, பேராசிரியா் மகபூப்ஜான் ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினா்.
ஓட்டம், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் வயது, எடை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என இரண்டு நாள்களுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை மாலை ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெறுவோருக்கு சாம்பியன் கோப்பையும் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை, பல்கலைக் கழக விளையாட்டுப் பிரிவு அலுவலா்கள், கல்லூரிகளின் உடற்கல்வி ஆசிரியா்கள் இணைந்து செய்துள்ளனா். பரிசளிப்பு விழாவில், பல்கலைக் கழக பதிவாளா் ஆா். காளிதாசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளாா்.