Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
பாறைக் குழியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து போராட்டம்
பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து வணிகா்கள், பல்வேறு கட்சியினா், பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டம், கடை அடைப்பு, குப்பை லாரி சிறை பிடிப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.
இந்நிலையில், ஜி.என். காா்டன் நுழைவாயில் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மேலும், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.