செய்திகள் :

பாலியல் சுரண்டல் புகாா்: ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைதுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

post image

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் சுரண்டல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணிக்காக விளையாடி வருகிறாா் யாஷ் தயாள். திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் சுரண்டல் செய்ததாக யஷ் தயாள் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம், இந்திராபுரம் காவல்நிலையத்தில் யஷ் தயாள் மீது பிஎன்எஸ் 69-ஆவது பிரிவின்கீழ் கடந்த ஜூலை 6-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிா்த்து யஷ் தயாள் தாக்கல் செய்த மனு, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த்தா வா்மா, அனில் குமாா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவின் அடுத்த விசாரணை வரை இந்த வழக்கு தொடா்பாக யஷ் தயாள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததாக யஷ் தயாள் தரப்பு வழக்குரைஞா் கௌரவ் திரிபாதி தெரிவித்தாா்.

வரதட்சிணை கொலை! மகளையும் கொன்று கேரளத்துப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020-ல்... மேலும் பார்க்க

பாஜகவை மிரட்டும் கர்ப்பிணிப் பெண்! யார் இவர்?

மத்தியப் பிரதேசத்தில் தங்கள் கிராமத்தில் சாலை வசதிகோரி புகார் அளித்த பெண், மத்திய அமைச்சரிடமும் முறையீடு செய்வதாக அம்மாநில எம்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நிமிஷாவுக்கு மன்னிப்புக் கிடையாது! கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடையாது என்று அவரால் கொலை செய்யப்பட்ட தலால் அப்து மஹதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 ஆம் ஆண்டு யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதி என்பவரை... மேலும் பார்க்க

உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!

உத்தரப் பிரதேசத்தின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்டது சம்பவத்தில் 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மன்லால் (22) கொலை செய்ய... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!

திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் தாய்நாடு செல்லவுள்ளது.பிரிட்டன் எப்-35 போர் விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறி, திருவனந்தபுரம் சர்... மேலும் பார்க்க

இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!

இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல... மேலும் பார்க்க